Wednesday, July 11, 2012
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா
புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில்
நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை
ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா
நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai
Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின்
மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் சற்று
சிறப்பாக EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப
பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா
நடைபெற்றது.
இதில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைகளின் .கவுரவ தலைவர் ஜனாப். தையூப் கான் அவர்கள் தலைமை வகிக்க, ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க பரிசளிப்பு விழா சிறப்பாக துவங்கியது. இதில் தாசின் அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். தாசின், பள்ளிகளின் தாளாளர் ஜனாப். லியாகத் அலி கான், EPMA-வின் செயலாளர் ஜனாப். ஜாபிர் ஹுசைன், நமது ஊராட்சிகளின் செயல் தலைவர் ஜனாப். ஜபருல்லாஹ் கான், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஜனாப். சிக்கந்தர் சீதக்காதி மறைக்காயர், மற்றும் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும், 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும், MDPS, EPMA, தாசின் அறக்கட்டளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் ஜனாப். ஜகுபர் சாதிக் தொகுத்து வழங்கினார். புதுவலசை வாழ் ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னால் ஜமாஅத் செயலாளர் ஜனாப். நிஜாமுதீன் நன்றியுரை கூற பரிசளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக