பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

திங்கள், 3 பிப்ரவரி, 2014

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு


தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். தாசின் அவர்கள் நமதூர் பள்ளிகளின் கெளரவ கல்வி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். அதற்காக அவரை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவரது பணிகள் சிறக்க உற்சாகப்படுத்தும் விதமாகவும் EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை(31/01/2014) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது நமதூரின் வளர்ச்சி குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்  EPMA நிர்வாகிகளுடன் பல கருத்துக்களை பரிமாறி கொண்டார். முக்கியமாக நமதூரில் நடத்தப்பட்டுவரும் மழலையர் வகுப்புகள், பழைய பள்ளி கூடத்தில் நடத்தப்பட்டு வந்தது. அந்த பள்ளி கூடம் பாதுகாப்பு இல்லாததாலும், மிகவும் பழுதடைந்து விட்டாதாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமதூர் ஜமாஅத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கூட்டத்திற்கு தான் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும்  கட்டிடத்திற்கான திட்டம் 5 வகுப்பரைகள் கொண்ட, குழந்தைகளுக்கான அனைத்து வசிதிகளுடன் கூடிய ஒரு புதிய பள்ளியை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் அதன் பணிகளை முடிக்கலாம் என்று தீர்மானிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு தன்னால் ஆன உதவியையும், பங்களிப்பையும் செய்வதாக ஜனாப் தாசின் அவர்கள் வாக்குறுதி அளித்தார்.

இந்த நல்ல திட்டங்களை வரவேற்பதாகவும், கடந்த காலங்களில் EPMA சார்பாக செய்த உதவிகள் இன்றளவும் நமதூர் மக்களுக்கு பயனுள்ளதாக தொடர்வதாகவும், மேலும் இந்த பணிகள் சிறக்க கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல நல்ல காரியங்களை ஊருக்கு செய்ய முடியும் என EPMA வின் தலைவர் ஜனாப். உமர் கான் அவர்கள் தெரிவித்தார்.

இறுதியாக ஜனாப். தாசின் அவர்களுக்கு EPMA நிர்வாகிகள் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். இச்சந்திப்பில் EPMA நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.














puduvalasainews .blpgspot.ae  thanks


news sahab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக