பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

செவ்வாய், 7 ஜனவரி, 2014

எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் (EPMA) - புதிய நிரிவாகிகள் தேர்வு


நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.


இந்த கூட்டத்தின் பிரதானம், நிர்வாகம் தேர்ந்தெடுத்து ஓராண்டு கழிந்த நிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டமாக இந்த அமர்வு இருந்தது. அதன் தொடர்சியாக புதிதாக UAE-க்கு வருகை தந்திருக்கும் சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். நீண்ட ஆலோசனைகளுக்கும், கருத்து பரிமாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



புதிய நிர்வாகிகள் விபரம்:

தலைவர் : சகோ. உமர்கான் அவர்கள்,
துணைத்தலைவர் : சகோ. நஸீர் ஹுஸைன் அவர்கள்,
செயளாலர் : சகோ. பைசல் அவர்கள்,
துணைச்செயளாலர் : சகோ. செய்யது அன்வர் அவர்கள்,
பொருளாலர் : சகோ. ஜெய்னுதீன் அவர்கள்,
ஒருங்கிணைப்பாளர் : சகோ. ஷஹாபுதீன் அவர்கள்.

தீர்மானங்கள்:

1. நமதூரை சேர்ந்த அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்களின் எண்ணிக்கை 140-க்கும் அதிகாமாகி உள்ளது. அவர்களை ஒருங்கிணைத்து நமது பணிகளை விரிவு படுத்த வேண்டும். கல்வி உதவி, மருத்துவ உதவி வேண்டி வரக்கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளாதால் நாம் ஒன்றாக இணைந்து அவர்களது தேவைகளுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

2. சகோதரர்களின் மொத்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 7-8 குழுக்களாக சகோதரர்களை வரிசைபடுத்தி அவர்களை தொடர்பு கொள்வதற்கும், தகவல்களை பரிமாரி கொள்வதற்க்கும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.

3. ஆலோசனைக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களிடத்தில் நமது ஊரின் இன்றைய அத்தியாவசிய தேவையான மேல் நிலை பள்ளி சம்பந்தமாக ஆலோசனைகளும், கலந்துரையாடல்களும் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

4. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து நமக்குவரும் உதவிகள் சம்பந்தமான வேண்டுகோள்கள், நாம் எடுக்கும் முடிவுகள் சம்பந்தமான தகவல் பரிமாற்றங்கள் சரியாக உறுப்பினர்களுக்கு சென்றடையும் விதமாக அவர்களோடு கலந்தாலோசனை மசூராக்கள் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

5. அமீரகத்தில் மட்டும் அல்லாது மற்றைய நாடுகளில் இருக்கும் நமதூர் சகோதரர்களும் நாம் செய்யும் பணிகளில் பங்கெடுக்க ஆர்வமாக உள்ளதால் அவர்களையும் நம்மோடு இணைத்து கொண்டு தகவல்களை பரிமாரிக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடர்சியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், செயளாலரும் கருத்துரையாற்றினர். அதில் சகோ. உமர்கான் அவர்கள் குறிப்பிடும் போது ஊரில் தேவைகளோடு காத்திருப்பவர்கள் நம்மை அனுகும் போது நம்மில் இருக்கும் சிறு, சிறு கருத்து வேறுபாடுகளால் அவர்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நம்மால் உதவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஆதலால் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், முயற்சியும் நம்முடைய ஊர்மக்களுக்கு பயனளிக்கும் விதமாய் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் என்று கேட்டுகொண்டார்கள்.

சகோ. பைசல் அவர்கள் குறிப்பிடும் போது சமூக பணிகளில் செயல்படும் போது ஒரு சில விமர்சனங்கள் நம்மை நோக்கி எழும் அந்த விமர்சனங்களால் விரக்தி அடையாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இஸ்லாமிய வரலாறுகள் நமக்கு இதை தான் பறைசாற்றுகின்றது. தொடர்சியான உழைப்பும், முயற்சியும் நிச்சயம் சமூகத்திற்கு பயணளிக்கும் விதமாய் அமையும்.  சமூகம் சார்ந்த விஷயங்களிலும், ஊரின் முன்னேற்றம் குறித்த கண்ணோட்டங்களிலும் நாம் கருத்துவேறுபாடுகளின்றி தொடர்ந்து பயனிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானகவும் என்று கேட்டுகொண்டு நிறைவு செய்தார்.



















நமதூர் சகோதரர்களை நீண்ட நாள்களுக்கு பிறகு ஒன்றாக ஒருங்கிணைத்த சந்தோஷத்தோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.


சகோ. பைசல் அவர்கள், thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக